SuperTopAds

மலேசியாவில் இஸ்ரேலியர் கண்டறியப்பட்டால் உடனடியாக வெளியேற்றப்படுவர் - மலேசியப் பிரதமர்!

ஆசிரியர் - Editor IV
மலேசியாவில் இஸ்ரேலியர் கண்டறியப்பட்டால் உடனடியாக வெளியேற்றப்படுவர் - மலேசியப் பிரதமர்!

மலேசியாவிற்குள் இஸ்ரேலிய குடிமக்கள் யாராவது இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்என்று மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மலேசியாவின் தெற்கு மாநிலமான ஜோஹூரில் (Johor) உள்ள 'நெட்வொர்க் ஸ்கூல்' (Network School) என்ற தனியார் குடியிருப்பு சமூக அமைப்பின் செயல்பாடுகளில் இஸ்ரேலியர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பிரதமர் இந்த அதிரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து மலேசிய உள்துறை அமைச்சகம் மற்றும் குடிவரவுத் துறையினர் தீவிர விசாரணைகளைத் தொடங்கியுள்ள நிலையில், மலேசியா இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை என்பதால், இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் எவ்வித சமரசமும் இன்றி அவர்கள் உடனடியாக நாடுகடத்தப்படுவார்கள் என்று பிரதமர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Radio