SuperTopAds

டிரம்ப்பைக் கொலை செய்பவருக்கு 10 மில்லியன் டொலர் - ஈராக்கின் 'இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் அறிவிப்பு!

ஆசிரியர் - Editor IV
டிரம்ப்பைக் கொலை செய்பவருக்கு 10 மில்லியன் டொலர் - ஈராக்கின் 'இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைக் கொலை செய்யும் எவருக்கும் 10 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என ஈராக்கின் 'இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

​தங்களது அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட நன்கொடைகள் மூலம் இந்த மாபெரும் பரிசுத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"குற்றவாளியான டிரம்ப்பைக் கொல்பவர், அல்லது அவரை தனிப்பட்ட முறையில் ஒழிப்பவர், அதற்கு வழிகாட்டுபவர் அல்லது அதற்குரிய உதவிகளை வழங்கும் தனிநபர், குழு அல்லது நிறுவனங்களுக்கு" இந்த 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை முழுமையாகக் கொண்டு சேர்க்கப்படும் என அந்த ஆயுதக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

​அண்மையில் வெள்ளை மாளிகையில் ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதியை டொனால்ட் டிரம்ப் சந்தித்த போது, 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட தங்களது தளபதிகளின் மரணத்தை நியாயப்படுத்திப் பேசியிருந்தார்.

டிரம்ப்பின் இந்த பகிரங்கமான மற்றும் ஆவேசமான பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அதற்குப் பழிவாங்கும் நோங்கிலுமே இந்த அதிரடி வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பிராந்திய ரீதியான போர் பதற்றம் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில், அமெரிக்க அதிபரின் தலைக்கு ஈராக் ஆயுதக்குழு விலை பேசியுள்ள இச்சம்பவம் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Radio