குவைத் மீது ஈரான் தாக்குதல் - பற்றி எரியும் மின் உற்பத்தி நிலையம்!

குவைத் மீது ஈரான் இன்று (17) நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை குவைத் வன்மையாக கண்டிப்பதாகவும்,குறித்த தாக்குதல்களினால் ஒரு மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் சில மின் உற்பத்தி அலகுகளுக்கு சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன என குவைட் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் இந்த ஆக்கிரமிப்பு, குவைத்தின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எதிரான அப்பட்டமான மீறலாகும்.
மேலும் இது சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அப்பட்டமான மீறலாகும் என குவைட் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.




