SuperTopAds

காணி தகராறு - தங்கையின் கணவனை படுகொலை செய்தவர் கைது

ஆசிரியர் - Editor II
காணி தகராறு - தங்கையின் கணவனை படுகொலை செய்தவர் கைது

அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக, ஒருவர் தனது தங்கையின் கணவனை  நேற்றைய தினம் வியாழக்கிழமை வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட காணித் தகராறே இந்த மோதலுக்கும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற படுகொலைக்கும் காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 35 வயதுடைய நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

Radio