SuperTopAds

இஸ்ரேலின் வெட்கக்கேடு - பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை விமர்சித்த எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள்!

ஆசிரியர் - Editor IV
இஸ்ரேலின் வெட்கக்கேடு - பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை விமர்சித்த எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள்!

இராணுவச் சேவையை நிராகரிக்கும் தீவிர பழமைவாத யூத ஆண்கள் கைது செய்யப் படுவதிலிருந்தும், அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளிலிருந்தும் தற்காலிகமாக விலக்கு அளிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் (Knesset) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெட்கக்கேடு  மற்றும் வெளியேறு  என முழக்கமிட்டு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

​ஆளும் கூட்டணியின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா, இராணுவச் சேவையில் இணைய மறுக்கும் தீவிர பழமைவாத யூதர்களின் கைது நடவடிக்கைகளை சில மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது.

இந்தச் சட்ட வரைவிற்கு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF), பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இச்சூழ்நிலையில், நாடாளுமன்ற இறுதி வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பிரதமர் நெதன்யாகு சபையிலிருந்து வெளியேறிய போதிலும், ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட சில முரண்பாடுகளுக்கு மத்தியில் 58-54 என்ற குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது

Radio