ஈராக்கிலிருந்து முற்றாக வெளியேறும் அமெரிக்கா!

ஈராக்கிலிருந்து அமெரிக்கா தனது இராணுவத்தை செப்டம்பர் 30-க்குள் முழுமையாக வெளியேற்றும் என ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, அந்நாட்டில் 23 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
படைகள் வெளியேறிய பின்னரும், அமெரிக்க நிறுவனங்களுடனான ஈராக்கின் உறவு தொடரும் என்று டிரம்ப் கூறினார்.
இந்த வெளியேற்றம், முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு இடைக்காலத் திட்டத்தின் ஒரு பகுதி என்பதை பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.




