மேற்காசியப் பகுதியில் அமெரிக்க அழுத்தம் தொடரும் வரை எரிபொருள் ஏற்றுமதிக்கு அனுமதியில்லை - ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மற்றும் தலையீடுகள் மேற்காசியப் பகுதியில் தொடரும் வரை, இந்த பிராந்தியத்தில் இருந்து எந்தவொரு எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயு ஏற்றுமதியையும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.




