பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எந்தத் திட்டமும் இல்லை - ஈரானின் வெளியுறவு அமைச்சு!

தற்போதைக்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எந்தத் திட்டமும் இல்லை என்றும், தற்காப்பு நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்தப்படுவதாகவும் ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானின் ஒட்டுமொத்த நாகரிகமும் அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தும் அதே வேளையில், பொதுமக்கள் மீது அமெரிக்கா கவனமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




