தெற்கு ஈரான் மக்கள் அசைக்க முடியாத மனவுறுதியுடையவர்கள் - ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் பெருமிதம்!

வரலாறு முழுவதும் தெற்கு ஈரான் பகுதி காலனித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாகவும், தேசத்தின் சுதந்திரத்தை பாதுகாக்கும் அரணாகவும் திகழ்ந்துள்ளதாக அதிபர் பெஷெஷ்கியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இப்பகுதி மக்கள் தற்போதைய எதிரிகளின் ஆக்கிரமிப்பு மற்றும் இன்னல்களை அசைக்க முடியாத மனவுறுதியுடன் எதிர்கொண்டு தங்களின் வரலாற்று மரபைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




