மேற்குக் கரையில் இஸ்ரேலின் புதிய சட்டவிரோத குடியேற்றத் திட்டம்!

சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் (West Bank) சுமார் 12,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கு இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.
இதன்பிரகாரம் பில்லியன் கணக்கிலான பிரம்மாண்ட நில ஆக்கிரமிப்புத் திட்டத்திற்கு இஸ்ரேல் அரசு முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது.




