பெற்றோரை கொலை செய்த குற்றத்தில் மகன் கைது!

குடும்ப தகராறில் தாய் தந்தையர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் 58 வயதுடைய நபரும் 54 வயதுடைய அவருடைய மனைவியும் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , அவர்களின் 26 வயதுடைய மகனை கைது செய்துள்ளனர்
ஆரம்ப கட்ட விசாரணைகளில் குடும்ப தகராறு காரணமாக தாய் தந்தையரை குறித்த இளைஞனே தாக்கி படுகொலை செய்ததாக தெரியவந்துள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்னர்.




