SuperTopAds

6 கிலோ கிராம் போதைப்பொருளுடன் வௌிநாட்டு பெண் கைது

ஆசிரியர் - Editor II
6 கிலோ கிராம் போதைப்பொருளுடன் வௌிநாட்டு பெண் கைது

6 கிலோ 180 கிராம் 'குஷ்' போதைப்பொருளை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் குழுவினால், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த போதைப்பொருளுடன் 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரான பெண்ணிடம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.