சவூதி - உக்ரைன் வெளியுறவு அமைச்சர் - கலந்துரையாடல்!

சவூதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவி இடையே தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அந்த அழைப்பின்போது, அவர்கள் இருதரப்பு உறவுகள், உக்ரைன் நெருக்கடியில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள், பிராந்திய நிகழ்வுகள் மற்றும் இருவருக்கும் பொதுவான பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.




