SuperTopAds

ஆஸிக் கடற்கரையில் மர்ம உலோகம் - அண்டவெளியிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

ஆசிரியர் - Editor IV
ஆஸிக் கடற்கரையில் மர்ம உலோகம் - அண்டவெளியிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மமான கோள வடிவிலான உலோகப் பொருட்கள், விண்வெளி ஏவுகனைகளில் பயன்படுத்தப்படும் அழுத்தக் கலன்களாக (Pressure vessels) இருக்கலாம் என்று அவுஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் (ASA) தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு கூடைப்பந்தின் அளவை விட இரு மடங்கு பெரியதாக உள்ள இந்தக் கோள வடிவிலான உலோகப் பொருட்களை, பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் தொடவோ அல்லது நகர்த்தவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவை எந்த விண்கலத்திலிருந்து விழுந்தன என்பது குறித்து சர்வதேச அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விண்வெளிக் குப்பைகள் பூமியில் விழுவது அரிதான நிகழ்வு என்றாலும், விண்வெளி ஆய்வுகள் அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய அவசிதங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க விண்வெளி நிறுவனங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையில், மீட்கப்பட்ட கோளங்கள் தற்போது பாதுகாப்பானவை என அவசரகால மீட்புப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.