SuperTopAds

கனடா துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor IV
கனடா துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு!

கனடாவின், டொரண்டோ நகரில் நடைபெற்ற விழா ஒன்றின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Radio