கத்தாரின் முன்னாள் தலைவர் கலீஃபா அல் தானி காலமானார்!

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி தனது 74ஆவது வயதில் ஞாயிற்றுக்கிழமை காலமானதாக அந்நாட்டு அமீரி திவான் (Amiri Diwan) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன கத்தாரின் வளர்ச்சிக்கு மிக முக்கிய அடித்தளம் அமைத்தவராகக் கருதப்படும் இவரது மறைவைத் தொடர்ந்து, கத்தாரில் தற்பொழுது அதிகாரப்பூர்வ துக்கத்தினங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.




