SuperTopAds

ஒப்பந்தத்தை மீறியது அமெரிக்காவே - ஈரானின் வெளியுறவு அமைச்சர்!

ஆசிரியர் - Editor IV
ஒப்பந்தத்தை மீறியது அமெரிக்காவே - ஈரானின் வெளியுறவு அமைச்சர்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை  அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரானின் உயர்மட்டத் தலைவருடன் தொடர்புடைய ஒரு தனிநபர் மீது அமெரிக்க திறைசேரி திணைக்களம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இது ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று அராக்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் கையெழுத்தான அந்த ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பும் 'தற்போதைய நிலையைத் தொடர' வேண்டும் மற்றும் அமெரிக்கா 'புதிய தடைகளை விதிக்கக்கூடாது' என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள நிலையிலேயே இச்சட்டம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் மீண்டும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாகவே இந்தத் தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து உரிமைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா ஈரானின் துறைமுகங்களைத் தாக்கியுள்ளது.

பதிலுக்கு ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்கி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Radio