SuperTopAds

ஈரானில் பயங்கர வெடிப்பு- ஈரானின் பற்றி எரியும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

ஆசிரியர் - Editor IV
ஈரானில் பயங்கர வெடிப்பு- ஈரானின் பற்றி எரியும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

மேற்கு ஈரானின் லொரெஸ்தான் மாகாணத்தில் உள்ள போல்டோக்தர் நகரில் அமைந்துள்ள 'ஆக்ஸின் பாலாயேஷ்' எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் வெடிப்பைத் தொடர்ந்து கடுமையான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் எரியக்கூடிய இரசாயனப் பொருட்கள் காரணமாக தீ வேகமாகப் பரவி, அடுத்தடுத்து பல வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிற்சாலையிலிருந்து பல நூறு அடி உயரத்திற்கு அடர்ந்த கரும்புகை எழுந்து வருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடுமையான வெப்பம் காரணமாக மீட்புப் பணிகள் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆரம்ப கட்ட தகவல்களின்படி, இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை.

விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னரே காரணம் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Radio