நாடு திரும்பும் ஷேக் ஹசீனா - நீதிமன்றத்தில் சரணடையவும் திட்டமிட்டம்!

பங்கலாரேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இரண்டு ஆண்டுகள் நாடுகடத்தப்பட்ட நிலையில் வரும் டிசம்பர் மாதம் வங்கதேசம் திரும்பி, மூத்த அவாமி லீக் தலைவர்களுடன் நீதிமன்றத்தில் தானாக முன்வந்து சரணடையத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், நாடு திரும்பியதும் கைது நடவடிக்கையையோ அல்லது மரணத்தையோ கூட எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறிய ஹசீனா, தனது தாய்நாட்டில் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையிலும், 2024-ல் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலவும் தொடர்ச்சியான அரசியல் பதட்டங்களுக்கு மத்தியிலும் அவரது இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
அவரது அறிக்கைகள் குறித்து வங்கதேச அரசோ அல்லது இந்திய வெளியுறவு அமைச்சகமோ உடனடியாக அதிகாரப்பூர்வ பதில் எதையும் வெளியிடவில்லை.




