தென்கிழக்கு சீனாவில் தீ விபத்து - 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

தென்கிழக்கு சீனாவின் ஜின்ஜியாங் நகரில் அமைந்துள்ள காலணி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக சீனாவின் அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜின்ஜியாங் நகரில் உள்ள ‘ஹுய்டெங் ஃபுட்வேர்’ (Huiteng Footwear) என்ற காலணித் தொழிற்சாலையில், அந்த நாட்டு நேரப்படி நேற்று நண்பகல் 12.00 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும், சுமார் 500-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பற்றிய தருணத்தில் கடமையில் இருந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
எனினும், கட்டடத்திற்குள் சிக்கியிருந்தவர்களில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தொழிற்சாலையிலிருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகளும், தொழிலாளர்கள் சிலர் தப்பிப்பதற்காகக் கட்டடத்தின் கூரை மீது தஞ்சமடைந்த காட்சிகளும் சீன ஊடகங்களில் வெளியாகியுள்ளன.




