நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் இந்திய கைதியும் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ். உன்னிகிருஷ்ணன் என்ற 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் குழுவினர் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கைதிகள் வாரியபொல மற்றும் போகம்பர சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டைச் சேர்ந்த பெண் கைதிகள் அடங்கிய குழுவொன்றும் அவர்களிடையே உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
நீர்கொழும்பு சிறையில் நிலவிய அமைதியின்மைக்கு மத்தியில், அங்குள்ள பெண் கைதிகள் குழுவொன்றும் போராட்டத்தில் ஈடுபட்டது.
எனினும், போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், கைதிகள் படிப்படியாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டார்.




