SuperTopAds

நேச நாடுகளின் மெத்தனப் போக்கே தற்காலிகப் போர்நிறுத்தம் முறிய காரணம் - டிரம்ப்!

ஆசிரியர் - Editor IV
நேச நாடுகளின் மெத்தனப் போக்கே தற்காலிகப் போர்நிறுத்தம் முறிய காரணம் - டிரம்ப்!

நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த போது, டிரம்ப் தனது அதிருப்தியை அப்பட்டமாக வெளிப்படுத்தினார்.

நாங்கள் நேட்டோவிடம் உதவி கேட்டோம். ஆனால் அவர்கள் உதவ மறுத்துவிட்டனர்.

குறிப்பாக இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அமெரிக்கப் படைகள் ஈரானைத் தாக்கத் தங்களின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்துவிட்டன.

பல நூறு பில்லியன் டாலர்களை நாம் நேட்டோவுக்காகச் செலவிடும்போது, நமக்குத் தேவைப்படும் நேரத்தில் அவர்கள் ஏன் உடன் நிற்பதில்லை? ரஷ்ய அதிபர் புதின் கூட நேட்டோவைக் கண்டு பயப்படுவதில்லை.

ஏனெனில் அது வெறும் காகிதப் புலி," என்று டிரம்ப் சாடினார்.

ஈரானுடனான தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததற்கு நேச நாடுகளின் இந்த மெத்தனப் போக்கும் ஒரு காரணம் என டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

Radio