தொடரும் சர்ச்சை - ஃபிஃபா தலைவரின் ராஜினாமாவுக்கு வலியுறுத்து!

ஒரு வீரர் மற்றும் ஒரு தேசிய அணிக்குச் சாதகமாக கால்பந்து விதிகள் மாற்றியமைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஃபிஃபா நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜியானி இன்ஃபான்டினோவின் ராஜினாமாவை வலியுறுத்துவதாகவும், சட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் ஃபிஃபா அமைப்புக்குத் தற்போது கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என நிரூபிக்கப்பட்டால், இது ஃபிஃபா வரலாற்றிலேயே மிகப்பெரிய சர்ச்சைகளில் ஒன்றாக அமையக்கூடும்.




