SuperTopAds

உயிரிழந்த சிறை அதிகாரிகளின் உடல்கள் இறுதி மரியாதைக்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு

ஆசிரியர் - Editor II
உயிரிழந்த சிறை அதிகாரிகளின் உடல்கள் இறுதி மரியாதைக்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன. 

குறித்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. 

கடந்த 06 ஆம் திகதி காலை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்தனர்.