SuperTopAds

ஒருநாள் விடுமுறை என்றாலும் மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் - ஜெர்மனியில் புதிய நடைமுறை!

ஆசிரியர் - Editor IV
ஒருநாள் விடுமுறை என்றாலும் மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் - ஜெர்மனியில் புதிய நடைமுறை!

ஜெர்மனி அரசு மருத்துவ விடுப்புக்கான விதிமுறைகளை அதிரடியாகக் கடுமையாக்குகிறது.

இனி ஒருநாள் உடல்நிலை சரியில்லை என்றாலும் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயம் ஆகும்.

தற்போதுள்ள 3 நாள் சலுகை மற்றும் கோவிட் காலத்தில் அறிமுகமான தொலைபேசி மூலம் சான்றிதழ் பெறும் முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும், சமூகத்தில் அதிக மருத்துவ விடுப்பு எடுப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் பிரதமர் ஃபிரைட்ரிச் மெர்ஸ் இந்தச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளார்.

மேலும், வேலையிலிருந்து ஓய்வுபெறும் வயதும் 65-லிருந்து 67-ஆக படிப்படியாக உயர்த்தப்படுகிறது.