SuperTopAds

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தங்கியிருந்த ஹோட்டல் அருகே குண்டு வெடிப்பு.!

ஆசிரியர் - Editor IV
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தங்கியிருந்த ஹோட்டல் அருகே குண்டு வெடிப்பு.!

சிரிய தலைநகர் டமாஸ்கஸில், பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படும் ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் மக்ரோன் அங்கிருந்து வெளியேறிய சில நிமிடங்களுக்குப் பின்னர் இந்த வெடிப்பு இடம்பெற்றதாகவும், சம்பவ இடம் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் விசாரணை நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதேவேளை, Donald Trump நேட்டோ மாநாட்டில் பங்கேற்பதற்காக துருக்கி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் சிரியாவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

Radio