SuperTopAds

டிரம்ப் மீது இஸ்ரேல் கடும் அழுத்தம் - பிரபல சர்வதேச ஊடகவியலாளர் பராக் ரவித்!

ஆசிரியர் - Editor IV
டிரம்ப் மீது இஸ்ரேல் கடும் அழுத்தம் - பிரபல சர்வதேச ஊடகவியலாளர் பராக் ரவித்!

மத்திய கிழக்கில் இராணுவச் சமநிலையைப் பேணும் நோக்கில் இஸ்ரேல் இந்த நகர்வை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

துருக்கியின் வான் பாதுகாப்பு மற்றும் விமானப்படைத் திறனை மேம்படுத்தும் அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா அந்நாட்டிற்கு வழங்குவதைத் தடுக்க, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிபர் டிரம்ப் மீது அழுத்தம் கொடுத்துள்ளதாகப் பிரபல சர்வதேச ஊடகவியலாளர் பராக் ரவித் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ அமைப்பில் துருக்கி அங்கத்தாராக இருந்தபோதிலும், பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இஸ்ரேலின் நலன்களைக் கருத்தில் கொண்டே இந்த இரகசியக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Radio