SuperTopAds

உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரும் ஏவுகணை தாக்குதல் - 10 பேர் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor IV
உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரும் ஏவுகணை தாக்குதல் - 10 பேர் உயிரிழப்பு!

ஜூலை 6, 2026 இன்று உக்ரைன் முழுவதும் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை ரஸ்யா நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் கீவ் (Kyiv) உட்பட பல்வேறு பகுதிகள் இந்தத் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய தகவல்களின்படி, 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ரஷ்யா 68 ஏவுகணைகளையும், சுமார் 351 தாக்குதல் ட்ரோன்களையும் ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் சில ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இலக்குகளைத் தாக்கியதால், குடியிருப்பு கட்டிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சமீபத்தில் ரஷ்ய எல்லைப் பகுதிகளில் உக்ரைன் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, உக்ரைனின் இராணுவ இலக்குகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் மேலும் தீவிரமடைந்து வருவதை வெளிப்படுத்துவதாக சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Radio