SuperTopAds

ஏமனின் அமைதியை விரும்பாத சவூதி ஆட்சியாளர்!

ஆசிரியர் - Editor IV
ஏமனின் அமைதியை விரும்பாத சவூதி ஆட்சியாளர்!

ஏமனின் ஹூதி தரப்போடு உறவை மேற்கொண்டு வந்த ஈரானோடு சவூதி ஆதரவு சனா ஆட்சியாளர்களும் இணக்கத்துக்கு வந்துள்ளனர் ,அதன் காரணமாகவே ஈரானிய விமானம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஏமன் தலைநகர் சனாவில் தரையிறங்கியது .

இந்த நிகழ்வை சகித்துக் கொள்ளாத சவூதி அரேபியாவின் படைகள் ஈரானிய விமானத்தை தரையிறங்க விடாது அதன் மீது தாக்குதலை தொடுக்க முனைந்தனர் ,

ஆனாலும் ஈரானிய விமானம் எதுவித தயக்கமும் இன்றி சனா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது ,

இதனிடையே அந்த விமானம் தரையிறங்குவதை தடுக்க முனைந்த சவூதி வான்படையின் விமானப்படை விமானங்கள் ஏமன் ஹௌதி படையணிகள் நடத்திய தீவிர எதிர் தாக்குதல் காரணமாக சவூதி அரேபிய விமானப்படை விமானங்கள் தங்கள் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு திரும்பிச் சென்றனர்.

ஒரு புறம் சவூதி அதிகாரிகள் ஈரானிய ஆன்மீக தலைவரின் ஜனாஸா நிகழ்வில் பங்கேற்கும் நிலையில் மறுபுறம் சவூதி படைகள் ஈரானிய விமான தரையிறக்கத்தை தடுக்க முனைந்தது சவூதியின் இரட்டை நிலைப்பாட்டை உலகுக்கு காட்டி நிற்கிறது.

தற்போதைய பீதியை சூழலில் ஏமன் சுன்னி ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டின் ஹூதி பிரிவினருடன் இணங்கிச் செல்லும் நிலைக்கு வந்துள்ளதன் காரணமாகவே இந்த புதிய விமான ஏற்பாடுகள் நடைபெற்றன.

எனினும் சவூதி ஆட்சியாளர்கள் ஈரானுடன் ஏமன் சுன்னி ஆதரவு ஆட்சியாளர்கள் முறுகல் நிலையை தவிர்த்து இணங்கிச் செல்வதை விரும்புவதாக தெரியவில்லை ,இதன் காரணமாக மீண்டும் ஹூதி சீயா கிளர்ச்சியாளர்களுடன் புதிய மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ள தோடு ஈரானிய ஆதரவு ஹூதி அணியினர் சவூதி அரேபியாவின் புதிய தலையீட்டுக்கு எதிராக பெரிய அளவிலான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளதோடு ஏடன் ஆதரவு படைகள் சவூதி அரேபிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்

தற்போதைய புதிய செய்திகளின் படி புதிய மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Radio