SuperTopAds

ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்குகள் ஆரம்பம் - காண்போரை உலுக்கிய கமெய்னியின் 14 மாதப் பேத்தி!

ஆசிரியர் - Editor IV
ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்குகள் ஆரம்பம் - காண்போரை உலுக்கிய கமெய்னியின் 14 மாதப் பேத்தி!

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெய்னி மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதிச்சடங்குகள் 4 மாதங்களின் பின்னர் நேற்று தெஹ்ரானில் ஆரம்பமாகியுள்ளன.

குறித்த தாக்குதலில் கமெய்னியுடன் அவரது மூத்த மகள், மருமகன், மருமகள் மற்றும் 14 மாதப் பேத்தி ஆகியோரும் உயிரிழந்தனர்.

போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இவர்களது உடல்கள் இதுவரை குளிரூட்டப்பட்ட ரகசிய அறையொன்றில் பாதுகாக்கப்பட்டிருந்தன.

தற்போது போர்ப் பதற்றம் சற்றுத் தணிந்துள்ள நிலையில், தெஹ்ரான் இமாம் கமேனி கிராண்ட் மொசல்லா வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு நகரங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி மஷ்ஹாரில் உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன.

இந்த நிலையில் ஈரான் தேசியக் கொடியால் போர்த்தப்பட்டிருந்த பெரிய சவப்பெட்டிகளுக்கு நடுவே வைக்கப்பட்டிருந்த 14 மாதக் குழந்தையின் சிறிய சவப்பெட்டியானது, அஞ்சலி செலுத்த வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோரின் நெஞ்சங்களை உலுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio