பாரிய வெடிப்பு - தூக்கி வீசப்பட்ட அதிகாரிகள்!

வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மின்சார அறையில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு, புகை மூட்டம் குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்த தீயணைப்பு வீரர்களை நோக்கி தீப்பிழம்புகளும் இடிபாடுகளும் சிதறிப் பாய்ந்த அதிர்ச்சியூட்டும் தருணம் வீடியோவில் பதிவாகியுள்ளது.
டகோமாவில் எடுக்கப்பட்ட அந்த பரபரப்பான வீடியோவில், தீயணைப்பு வீரர்கள் குழு ஒன்று மின்சார அறையின் கதவை வலுக்கட்டாயமாகத் திறப்பதும், அதைத் தொடர்ந்து அடர்ந்த புகை வெளியேறுவதும் தெளிவாகத் தெரிகிறது.
அடுத்த சில வினாடிகளில், கதவு வழியாக ஒரு சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஜன்னல்கள் நொறுங்கின; அங்கிருந்த செங்குத்து திரைச்சீலைகளும் இடிபாடுகளும் காற்றில் பறந்தன.
உடனே தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தை விட்டு வேகமாக பின்வாங்கினர்




