அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

அடுத்த வாரம் துருக்கியின் அங்காராவில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சி மாநாட்டின் இடையே, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்புள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த முக்கிய சந்திப்பிற்கான ராஜதந்திர ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதே நேரம் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று இரவு நடத்திய மிகக் கொடூரமான 11 மணி நேர வான்வழித் தாக்குதலில், குறைந்தது 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 90க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.




