நேட்டோவுக்குள் எடுக்கப்படும் முடிவுகள் இனிவரும் காலத்தில் கூட்டு ஆலோசனைகள் மூலமே எடுக்கப்படும் - ஜெர்மனி அதிபர்!

ஈரான் போரில் அமெரிக்காவின் உத்திகள் தொடர்பாக, ஜெர்மனி அதிபர் Friedrich Merz மற்றும் அதிபர் டிரம்ப் இடையே அண்மையில் கருத்து வேறுபாடுகள் வெடித்தன.
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க நேட்டோ படைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற டிரம்பின் கோரிக்கையை, "இது நேட்டோவின் போர் அல்ல" எனக் கூறி ஜெர்மனி மறுத்திருந்தது.
இந்தச் சூழலில், அடுத்த வாரம் துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ மாநாட்டிற்கு முன்னதாகப் பேசியுள்ள அமைச்சர் பிஸ்டோரியஸ், நேட்டோவுக்குள் எடுக்கப்படும் முடிவுகள் எந்தவொரு தனி நாட்டாலும் ஒருதலைப்பட்சமாக ஆணையிடப்படாமல், கூட்டு ஆலோசனைகள் மூலமே எடுக்கப்படுகின்றன என்று தெளிவுபடுத்தியுள்ளார்.




