SuperTopAds

அமெரிக்காவின் சீஹாக் ரக ஹெலிகாப்டர் அரபிக்கடலில் விபத்து!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்காவின் சீஹாக் ரக ஹெலிகாப்டர் அரபிக்கடலில் விபத்து!

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ‘MH-60S சீஹாக்’ ரக ஹெலிகாப்டர் ஒன்று அரபிக்கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்' விமானம் தாங்கிப் போர்க்கப்பலில் இருந்து இயக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 4 பணியாளர்கள் பயணித்துள்ளனர்.

அவர்களில் 3 வீரர்கள் உடனடியாக மீட்கப்பட்டு போர்க்கப்பலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, மேலும் ஒரு வீரரைத் தேடும் பணிகள் அரபிக்கடலில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விபத்து எவ்வித எதிரிகளின் தாக்குதலாலும் ஏற்படவில்லை என அமெரிக்க ஐந்தாவது கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

Radio