அமெரிக்கா அடக்கி வைக்கத் தவறினால், இஸ்ரேலுக்கு ஈரான் தகுந்த பாடம் புகட்டும் - அமைச்சர் அப்பாஸ் அராக்சி!

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனிக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கொலை மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் உச்சமடைந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரேலை அடக்கி வைக்கத் தவறினால், இஸ்ரேலுக்@கு ஈரான் தகுந்த பாடம் புகட்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி சமூக வலைத்தளமான X தளத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத் இருதரப்பு உடன்படிக்கையின் கீழ் இஸ்ரேலைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், தங்களது தலைவர்கள் அல்லது மக்கள் மீது ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு உடனடியாகவும் மிகச் சக்திவாய்ந்த முறையிலும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்




