SuperTopAds

பில்லியன் பெறுமதியான தங்கத்திலான உள்ளாடைகளுடன் பெருமளவு பணமும் ஈராக் MP வீட்டில் மீட்பு!

ஆசிரியர் - Editor IV
பில்லியன் பெறுமதியான தங்கத்திலான உள்ளாடைகளுடன் பெருமளவு பணமும் ஈராக் MP வீட்டில் மீட்பு!

பில்லியன் கணக்கு பெறுமதியான தங்க உள்ளாடைகள் மற்றும் பெருமளவு பணமும் ஈராக் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் சிக்கியயுள்ளது.

அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் பில்லியன் கணக்கான மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட உள்ளாடைகள் மற்றும் கோடிக்கணக்கான பணக்கட்டுகளும் கண்டெடுக்கப்பட்ட செய்தி, தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பாரிய ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் ஈராக் அரசியல் தளத்தையும் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

ஈராக் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல்-அப்பாசி (Hind Al-Abbasi) என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்தே இந்த ஆபரணங்கள் மற்றும் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அவரது வீட்டை முற்றுகையிட்டு நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 57 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணமும், 27 கிலோகிராம் எடையுள்ள தூய தங்கமும் கண்டெடுக்கப்பட்டுள்ளன

Radio