இராஜதந்திர முயற்சிகளுக்கு முன்னுரிமை - போருக்கும் தயார் ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர்!

ஈரான், அமெரிக்காவுடனான இராஜதந்திர முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், அதேவேளையில் போருக்கும் தயாராக இருப்பதாகவும் ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்தார்.
தோஹாவில் ஈரான் மற்றும் அமெரிக்கத் தூதுக்குழுக்கள் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தவிருந்த நிலையில், அரசுத் தொலைக்காட்சிக்கான நேர்காணல் ஒன்றில் பேசிய காலிபாஃப் -
நாங்கள் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகிறோம்; ஆனால் அப்பேச்சுவார்த்தை நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், நாங்கள் போருக்கும் தயாராகவே இருக்கிறோம். அதற்கேற்ப பதிலடி கொடுப்போம், என்று கூறினார்.




