போர்க்குற்றங்களில் இருந்து இராணுவத்தை விடுவிக்கும் யோசனைக்கு கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு!

ஆசிரியர் - Admin
போர்க்குற்றங்களில் இருந்து இராணுவத்தை விடுவிக்கும் யோசனைக்கு கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு!

தமிழ் கைதி­கள் சில­ரின் குற்­றங்­கள் அவர்­க­ளின் அர­சி­யல் உரி­மை­யு­டன் சம்­பந்­தப்­பட்­டுள்­ளன. படைத் தரப்பை பொறுத்­த­வ­ரை­யில் அவர்­கள் இழைத்­த­னர் என்று கூறப்­ப­டும் குற்­றங்­கள் சர்­வ­தேச மனித உரிமை மீறல்­கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வை­யா­கும். இந்த இரண்­டை­யும் ஒரே அடிப்­ப­டை­யில் பார்ப்­பதை ஏற்­றுக் கொள்ள கொள்ள முடி­யாது என்று எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

தனிப்­பட்ட மற்­றும் பொதுக் குற்­றங்­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இரா­ணு­வத்­தி­னர் மற்­றும் புலி உறுப்­பி­னர்­கள் விட­யத்­தில் உட­ன­டி­யாக சட்ட நட­வ­டிக்­கை­களை எடுத்து அவர்­க­ளுக்­குப் பொது­மன்­னிப்பை வழங்கி நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்­டும் என்று அரசு முன்­வைத்­துள்ள யோசனை தொடர்­பா­கக் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

கேள்வி: இரா­ணு­வத்­தி­ன­ரைப் போர்க் குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து விடு­விக்க வேண்­டும் என்று ஐ.நாவுக்கு யோசனை முன்­வைக்­க­வுள்­ளோம் என்று அரச தலை­வர் கூறி­யிக்­கின்­றார். அதே­போன்று தடுப்­பில் உள்ள புலி­க­ளை­யும் குற்­றம்­சாட்­டப்­பட்ட இரா­ணுவ உறுப்­பி­னர்­க­ளை­யும் பொது­மன்­னிப்­பின் கீழ் விடு­தலை செய்­ய­வேண்­டும் என அமைச்­சர் சம்­பிக்க ரண­வக்க கூறி­யி­ருக்­கின்­றார். இது தொடர்­பில் உங்­க­ளி­ட­மும் கோரிக்கை வைக்­கப்­ப­டும் என்று கூறி­யி­ருக்­கின்­றார். அது தொடர்­பில் உங்­கள் கருத்து என்ன?

பதில்: அது தொடர்­பில் நாங்­கள் சிந்­திக்­க­வேண்­டும். எல்­லா­வற்­றை­யும் ஒரே வித­மாக பார்க்க முடி­யாது. தமிழ் கைதி­கள் சில­ரின் குற்­றங்­கள் அவர்­க­ளின் அர­சி­யல் உரி­மை­யு­டன் சம்­பந்­தப்­பட்­டுள்­ளன. படைத் தரப்பை பொறுத்­த­வ­ரை­யில் அவர்­கள் இழைத்­த­னர் என்று கூறப்­ப­டும் குற்­றங்­கள் சர்­வ­தேச மனித உரிமை மீறல்­கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வை­யா­கும். இந்த இரண்­டை­யும் ஒரே அடிப்­ப­டை­யில் பார்ப்­பதை ஏற்­றுக் கொள்ள கொள்ள முடி­யாது.

கேள்வி: பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­யைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தில் கூட்­ட­மைப்பு உறு­தி­யாக இருக்­கின்­றதா?

பதில்: நிச்­ச­ய­மாக நாங்­கள் உறு­தி­யாக இருக்­கின்­றோம்.

கேள்வி: ஏன் அரச தரப்பு இப்­படி ஒரு யோச­னையை முன்­வைக்­கின்­றது?

பதில்: நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து தங்­களை மீட்­டுக்­கொள்­வ­தற்­காக இவ்­வி­த­மான கருத்­துக்­களை முன்­வைக்­க­லாம்.

அதேவேளை,போர்க் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தொடர்பில் முறையான நீதி விசாரணைகள் நடைபெற்று முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். படையினரில் யார், யார் எத்தகைய குற்றங்களை இழைத்தார்கள் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே பொதுமன்னிப்பு பற்றி ஆராயவோ, பரிசீலிக்கவோ முடியும்.

முகம் தெரியாத குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதாக பிரகடனப்படுத்துவதன் மூலம் போர்க்குற்றங்களை மூடி மறைத்து, நீதியான விசாரணைகளை புறந்தள்ளும் செயற்பாட்டுக்கு நாம் இணங்கவே மாட்டோம். அந்த முயற்சியை வன்மையாக எதிர்ப்போம்.

தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் போரின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது உண்மையே. ஆனால், அங்கு உண்மைகள் முழுமையாக கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்டு, குற்றமிழைத்தோர் அடையாளப்படுத்தப்பட்ட பின்னரே அந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

இங்கும் விடுதலைப்புலிகள் தரப்பில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்ட போராளிகள் உட்பட அனைவரும் அதற்காக கைது செய்யப்பட்டனர். விசாரிக்கப்பட்டனர். உண்மைகள் கண்டறியப்பட்டன. அதன் பின்னரே சுமார் 12,000 போராளிகளுக்கு மன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட்டார்கள். புனர்வாழ்வு என்ற வகையில் கூட அவர்கள் தடுப்பை எதிர்கொண்ட பின்னரே விடுவிக்கப்பட்டனர்.

பெரிய குற்றங்களை இழைத்தோர் அதற்காக விசாரிக்கப்பட்டார்கள். தண்டிக்கப்பட்டனர். சிறை வைக்கப்பட்டனர். இன்னும் சிறையில் இருக்கின்றனர். தடுப்புக் காவலில் வாடுகின்றனர்.அப்படி எல்லாம் இருக்கையில் ஒட்டுமொத்தமாக படையினருக்கு பொதுமன்னிப்பு என்ற அறிவிப்பு மூலம் அவர்கள் இழைத்த குற்றங்களையும், குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம்.

இலங்கை அரச தரப்பின் அத்தகைய மூடி மறைப்பு ஏற்பாட்டுக்கு சர்வதேச சமூகம் ஒருபோதும் உடன்படாது என்று நம்புகின்றோம் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு