ஈரானுக்கும் எங்களுக்கும் இடையே பரஸ்பர புரிதல் இருக்க வேண்டும் - கத்தார் வெளியுறவு அமைச்சர்!

ஈரான் ஒரு அண்டை நாடு. எங்களுக்கும் அந்த நாட்டிற்கும் இடையே பரஸ்பர புரிதல் இருக்க வேண்டும்.
நடந்தவை ஏற்றுக்கொள்ள முடியாதவை — இவை எங்களுக்கு எதிராகவும், வளைகுடா நாடுகளில் உள்ள எங்கள் சகோதரர்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளன என கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார்.
மேலும் நாம் அனைவரும் ஒரே பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள்; எனவே, இதற்கான தீர்வு இராஜதந்திர ரீதியிலானதாகவே இருக்க வேண்டும். நாங்கள் ஒரு செழிப்பான பிராந்தியத்தையே காண விரும்புகிறோம்.
இந்தப் போர்கள் விட்டுச் சென்றுள்ள சூழலுக்கு மாற்றாக, வளைகுடா நாடுகளுடன் ஆக்கபூர்வமாக ஒத்துழைக்கும், உயர் மட்டத்திலான நம்பிக்கையும் ஒத்துழைப்பும் கொண்ட ஒரு செழிப்பான வளைகுடாப் பகுதியையும், செழிப்பான ஈரானையும் நாங்கள் காண விரும்புகிறோம்




