ஈரானின் தாக்குதலால் பஹ்ரைனின் குடியிருப்பு கட்டிடம் சேதம்! உயிரிழப்புகள் இல்லை என தகவல்!

ஈரானிய படைகளினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்து, பஹ்ரைனின் முஹர்ராக் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளதாக புகைப்படங்கள் மற்றும் களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள வான்வழி மோதல்களின் பின்னணியில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று பஹ்ரைன் அதிகாரிகள் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
எனினும், கட்டிடத்திற்குச் சேதம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.




