SuperTopAds

மேற்காசிய அமெரிக்க தளங்கள் மீது ஈரான் கடும் தாக்குதல் - லெபனான் ஜனாதிபதி கண்டனம்!

ஆசிரியர் - Editor IV
மேற்காசிய அமெரிக்க தளங்கள் மீது ஈரான் கடும் தாக்குதல் - லெபனான் ஜனாதிபதி கண்டனம்!

பஹ்ரைன் மற்றும் குவைத் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இந்த தாக்குதல்கள், நாடுகளின் இறையாண்மையை வெளிப்படையாக மீறும் செயலாகவும், பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நேரடி அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போரை நிறுத்துவதற்கும் பதற்றத்தைத் தணிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் பிராந்திய மற்றும் சர்வதேச முயற்சிகளை சீர்குலைக்கும் நோக்கிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமைக்கு தீர்வு காண, அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு முயற்சிக்கு ஆதரவளிக்கும் தரப்பினரும், சர்வதேச சமூகமும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என லெபனான் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, பஹ்ரைன் மற்றும் குவைத்துக்கு லெபனான் தனது முழுமையான ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி ஜோசப் அவுன் தெரிவித்துள்ளார்.

Radio