இஸ்ரேல் இனி அமெரிக்க ராணுவ உதவியை மட்டும் சார்ந்திராது - பிரதமர் நெத்தன்யாகு!

இஸ்ரேல் இனி அமெரிக்காவின் ராணுவ உதவியை மட்டும் சார்ந்திருக்காமல், தனது சொந்த சுதந்திரமான ஆயுத அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தெற்கு லெபனான் மீதான தாக்குதல்களைக் குறைக்குமாறு அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஆதரவை மதிப்பதாகக் கூறியுள்ள நெதன்யாகு, அதே நேரத்தில் தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்புகளை அழிக்கும் ராணுவ நடவடிக்கை தொடரும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.




