மத்திய கிழக்கின் முக்கிய நாடுகளுக்கு அவசரமாகச் செல்லும் அமெரிக்க வெளியுறவுச் செயலர்!

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் Marco Rubio, ஈரானுடன் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் சூழலில், செவ்வாய்க்கிழமை முதல் United Arab Emirates, Kuwait மற்றும் Bahrain ஆகிய வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, ஈரானுடன் எட்டப்பட்டுள்ள ஆரம்பகட்ட ஒப்பந்தத்திற்கு பிராந்திய ஆதரவைப் பெறுவது, வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கவலைகளைப் பற்றி ஆலோசிப்பது மற்றும் Gulf Cooperation Council உறுப்பினர்களுடன் சந்திப்பது உள்ளிட்ட விவகாரங்கள் முக்கியமாக இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




