பிரித்தானியப் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) தனது பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆளும் தொழிற்கட்சியின் (Labour Party) நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து கடந்த சில நாட்களாகக் கொடுக்கப்பட்ட கடுமையான அழுத்தங்களைத் தொடர்ந்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்நிலையில், கிரேட்டர் மான்செஸ்டர் நகரின் முன்னாள் முதல்வராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham), கீர் ஸ்டார்மருக்குப் பதிலாகத் தொழிற்கட்சியின் அடுத்த தலைவராகவும் பிரித்தானியப் பிரதமராகவும் பொறுப்பேற்பதற்கான போட்டியில் தாம் களமிறங்குவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
புதிய தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் வரையில் கீர் ஸ்டார்மர் தற்காலிகப் பிரதமராகப் பதவியில் நீடிப்பார் எனவும், இந்த மாற்றங்களுக்கான உத்தியோகபூர்வ நடைமுறைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது




