60 நாள் இணக்கம் - சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் பிரதானமாக கவனிக்கப்படும் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.63% ஆல் குறைந்து 79.26 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அத்துடன், டப்ளியூ.டி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 0.40% ஆல் சரிவடைந்து 75.55 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது.
இதே வேளை சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 1.30% அதிகரித்து 3.275 டொலராகப் பதிவாகியுள்ளது.




