கத்தார் தொழிற்சாலை வெடிவிபத்து - 54 பேர் காயம், 18 பேர் மாயம்!

கத்தாரின் முக்கிய திரவ இயற்கை எரிவாயு (LNG) பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 54 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 18 பேரைக் காணவில்லை என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள 'பர்சான்'தொழிற்சாலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த "உள்நாட்டு வெடிப்பு" நேரிட்டதாக கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களைக் கண்டறிய 'கத்தார் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழு' தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மேலும், தொழிற்சாலையிலிருந்து நச்சு வாயுக்கள் ஏதும் கசியாததால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கத்தார் எனர்ஜி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
தலைநகர் தோகாவில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள ராஸ் லஃப்பான், உலகளாவிய எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி ஏற்றுமதி மையமாகும். கடந்த மார்ச் மாதம், ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் இந்த மையம் கடுமையான சேதத்தைச் சந்தித்தது.
இதனால் இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கான எரிவாயு விநியோக தற்காலிக நிறுத்த ஒப்பந்த விதியை கத்தார் எனர்ஜி பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.




