தாக்குதல் நடத்தினால் பதிலடியாக தாக்குவோம்- ஈரான்!

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை வேளையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் பிரதிநிதிகளை எச்சரித்து, ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா "கைப்பற்றலாம்" என்று கூறியதற்கு ஈரானின் தலைமை பேச்சுவார்த்தை பிரதிநிதியும் பாராளுமன்ற சபாநாயகருமான மொஹம்மத் பாகர் காளிபாப் X தளத்தில் கடுமையாக எச்சரித்துள்ளார்,
அவர்களின் மிரட்டல்கள் உண்மையாக இருந்திருந்தால், இன்று இவ்வளவு அவசர நிலையிலும் விரக்தியிலும் அவர்கள் இருக்க வேண்டியிருக்காது என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா?" என்று காளிபாப் கேள்வி எழுப்பினார்.
மேலும், அமெரிக்காவின் மிரட்டல்களை ஈரான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், தேவையானால் பதிலடி கொடுக்க ஈரானின் ஆயுதப் படைகள் தயாராக உள்ளன என்றும் அவர் எச்சரித்தார்.
அமெரிக்கர்கள் தங்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
எங்கள் ஆயுதப் படைகள் வேறுவிதமான முறையில் பதிலளிக்கத் தயாராக உள்ளன என்று அவர் தெரிவித்தார்




