60 நாட்களுக்கான செயற்திட்டத்திற்கு இரு நாடுகளும் சம்மதம் - பாகிஸ்தான், கட்டார் கூட்டாகத் தெரிவிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே இறுதியான உடன்பாட்டை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட 60 நாட்களுக்கான செயற்திட்டத்திற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அணுசக்தி விவகாரங்கள் மற்றும் தடைகள் நீக்கம் ஆகிய விவகாரங்களில் ஊக்கமளிக்கும் வகையிலான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாட்டாளர்களாக செயற்பட்ட பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் கூட்டாகத் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுகமான இறுதி உடன்பாட்டை நோக்கிய நகர்வில் இந்த 60 நாள் செயற்றிட்டம் ஒரு முக்கிய கட்டமாகப் பார்க்கப்படுகிறது.




