ரஷ்யாவின் உதவி - உக்ரைன் மற்றும் ஜப்பான் எச்சரிக்கை!

ரஷ்யாவின் உதவியால் வடகொரிய ஏவுகணைகள் மிகவும் துல்லியமாகி வருகின்றன என உக்ரைன் மற்றும் ஜப்பான் நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
வடகொரியாவின் KN-23 மற்றும் KN-24 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் (SRBM) தற்போது குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ரஷ்ய படைகளால் உக்ரைன் போரில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த ஏவுகணைகள் அதிக துல்லியமற்றதாக இருந்தன.
சில ஏவுகணைகள் இலக்கை பல கிலோமீட்டர்கள் தவறவிட்டதோடு, சில நடுவானில் வெடித்து செயலிழந்தன.
ஆனால் சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்த ஏவுகணைகளின் செயல்திறன் பெரிதும் உயர்ந்துள்ளது. ரஷ்யா, வடகொரிய ஏவுகணைகளின் Inertial Navigation System (INS)-ஐ மேம்படுத்த உதவியதாக நுண்ணறிவு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக,
முன்பு சுமார் 1 கிலோ மீட்டர் வரை இருந்த இலக்கு பிழை (margin of error), தற்போது வெறும் 1 முதல் 5 மீட்டர் வரை குறைந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
ஜப்பான் மற்றும் தென் கொரிய பாதுகாப்பு அதிகாரிகள், உக்ரைன் போரை வடகொரியா தனது ஏவுகணை தொழில்நுட்பத்தை நேரடி போர்க்களத்தில் சோதித்து மேம்படுத்தும் வாய்ப்பாக பயன்படுத்தி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்பு நிபுணர்கள் கூறுவதாவது, இந்த மேம்பாடுகள் வடகொரியாவிற்கு
-இராணுவ கட்டளை மையங்கள், -வெடிமருந்து களஞ்சியங்கள், -முக்கிய இராணுவ தளங்கள்
போன்ற உயர்மதிப்புள்ள இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கும் திறனை வழங்கக்கூடும்.
குறிப்பாக தென் கொரியாவிற்கு இது கவலைக்குரிய விஷயமாகும். ஏனெனில் அதன் அடுத்த தலைமுறை L-SAM II வான் பாதுகாப்பு அமைப்பு முழுமையாக செயல்பட சுமார் 2035 வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




