ஒப்பந்தத்தை சோதிக்கும் இஸ்ரேல் - அமெரிக்காவிடம் வலியுறுத்தும் ஈரான்!

"லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடிய தாக்குதல்களை அமெரிக்கா உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், அப்போதுதான் இரு நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட தற்காலிக அமைதி உடன்படிக்கை (MoU) முன்னோக்கி நகரும்" என ஈரான் எச்சரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் நடக்கவிருந்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இஸ்ரேலின் திடீர் தாக்குதலால் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.




